மே 29, புதுடெல்லி (New Delhi): முத்தூட் ப்ளூ என்று பிரபலமாக அறியப்படும் இந்தியாவின் 137 ஆண்டு பழமையான முன்னணி வணிக நிறுவனமான முத்தூட் பாப்பச்சன் குழுமம் (Muthoot Pappachan Group) தனது பிராண்ட் தூதராக ஷாருக்கானை நியமித்துள்ளது. இதுகுறித்து முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் தலைவர் தாமஸ் ஜான் முத்தூட் கூறியுள்ளதாவது, "இது எங்களுக்கு மிகப்பெரிய மைல்கல். ஷாருக்கானின் பயணம், எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் உள்ள சாமானியர்களுக்கும் எங்களை பற்றி கொண்டு சேர்க்கும்" என்றார்.
மேலும் இதுகுறித்து குழுவின் பிராண்ட் தூதராக, ஷாருக்கான் கூறியுள்ளதாவது, "முத்தூட் பாப்பச்சன் குழுமத்தின் பிராண்ட் தூதராக சேர்வது மகிழ்ச்சியாக உள்ளது. நூற்றாண்டு கால பாரம்பரியத்துடன், முத்தூட் இந்தியாவின் நிதி நிலப்பரப்பில் மகத்தான பங்களிப்பை அளித்துள்ளது" என்றார். Sex Assault On 12-Year-Old Girl: தோப்புக்குள் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. சிலம்ப பயிற்சியாளர் கைது..!
முத்தூட் பாப்பச்சன் குழுமம் முத்தூட் ஃபின்கார்ப் லிமிடெட் (குழுமத்தின் முதன்மை நிறுவனம்), முத்தூட் மைக்ரோஃபின் லிமிடெட், முத்தூட் கேபிடல் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் முத்தூட் ஹவுசிங் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் உள்ளிட்ட நாட்டின் முன்னணி NBFCகளின் விளம்பரதாரர் ஆகும். மேலும் முத்தூட் பாப்பச்சன் குழுமம், நிதிச் சேர்க்கை அனைவருக்கும் எட்டக்கூடிய எதிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ஷாருக்கானை அவர்களின் புதிய பிராண்ட் தூதராக நியமித்துள்ளது அவர்களுக்கு லாபம் ஈட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.