FIFA World Cup 2026 Schedule: 2026 உலகக் கோப்பை கால்பந்து... தேதி மற்றும் மைதானங்களின் பட்டியல் வெளியீடு..!
FIFA World Cup 2026 (Photo Credit: @CBSSportsGolazo X)

பிப்ரவரி 05, மெக்சிகோ (Mexico): வரவிருக்கும் உலகக் கோப்பை 2026க்கான அட்டவணை மற்றும் இடங்களை ஃபிஃபா (FIFA) வெளியிட்டுள்ளது. உலகமே போட்டிக்கு தயாராகி வரும் நிலையில், உலகக் கோப்பை கால்பந்து ஜூன் 11, 2026 அன்று தொடங்க உள்ளது.

முதல் முறையாக உலகக் கோப்பையில் 48 அணிகள் மோதுகின்றன. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் 16 நகரங்களில் போட்டியை நடத்துகின்றன. ஜூன் 11 ஆம் தேதி மெக்சிகோ சிட்டியில் உள்ள அஸ்டெகா ஸ்டேடியம் முதல் ஆட்டத்தை மெக்சிகோ விளையாடும். போட்டியின் இறுதிப் போட்டி நியூ ஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் ஜூலை 19, 2026 அன்று நடைபெற உள்ளது. India's Shakti Wins at Grammys 2024: கிராமி விருது 2024.. இந்தியாவின் சக்தி இசைக்குழுவுக்கு கிராமி விருது..!

இந்தப் போட்டியில் மெக்சிகோ சிட்டி ஐந்து போட்டிகளை நடத்தவுள்ளது. நியூ யார்க்/நியூ ஜெர்சியில் இறுதிப் போட்டி உட்பட எட்டு ஆட்டங்கள் நடத்தப்படும். டல்லாஸ் மற்றும் அட்லாண்டா இரண்டு அரையிறுதிகள் உட்பட முறையே ஒன்பது மற்றும் எட்டு ஆட்டங்களை நடத்தும். மியாமி மூன்றாவது இடத்திற்கான பிளேஆஃப் மற்றும் காலிறுதியுடன் ஏழு ஆட்டங்களை நடத்தும்.