GT Vs LSG Toss Update (Photo Credit: @IPL X)

மே 22, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025)தொடரில், நேற்று (மே 21) நடைபெற்ற போட்டியில், டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்நிலையில், இன்று (மே 22) குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. MI Vs DC: மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி.. டெல்லி அணி படுதோல்வி..!

டைட்டன்ஸ் எதிர் சூப்பர் ஜெயிண்ட்ஸ் (Gujarat Titans Vs Lucknow Super Giants):

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மறுபுறம், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்து, 7வது இடத்தை பிடித்துள்ளது. இப்போட்டியில், குஜராத் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.