MI Vs DC (Photo Credit: @IPL X)

மே 21, மும்பை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், இன்று (மே 21) நடப்பு சீசனில் 63வது ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் (Mumbai Indians Vs Delhi Capitals) அணிகள் மோதின. இப்போட்டி, மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கனவே, குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் பிளே ஆப்பை உறுதி செய்துவிட்டது. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, டெல்லி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. MI Vs DC: சூர்யகுமார் யாதவ், நமன்தீர் அதிரடி ஆட்டம்.. டெல்லி வெற்றிக்கு 181 ரன்கள் இலக்கு..!

181 ரன்கள் இலக்கு:

இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்தன. திலக் வர்மா 27 பந்துகளில் 27 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார். மறுபுறம், நிதானமாக விளையாடி வந்த சூர்ய குமார் யாதவ் இறுதியில் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 73 ரன்கள் அடித்தார். நமன்தீர் 8 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார். இறுதியில், மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 180 ரன்கள் குவித்தது.

மும்பை அணி வெற்றி:

இதனையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு, கேப்டன் பாப் 6, கேஎல் ராகுல் 11 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர். அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற டெல்லி அணி 65 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது, ஜோடி சேர்ந்த சமீர் ரிஸ்வி - அசுடோஸ் சர்மா நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இறுதியில், டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை அணி சார்பில் சான்ட்னர் 4 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கியமான வெற்றிகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி: