World Heavyweight Championship: உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் போட்டி.. சமி ஜெய்னை பொட்டலம் போட்டு அனுப்பிய குந்தர்..!
சமி ஜெய்ன் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் போட்டி வெறித்தனமாக நடந்து முடிந்துள்ளது.
அக்டோபர் 08, மிசோரி (Sports News): வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை (இந்திய நேரப்படி) டபிள்யூடபிள்யூஇ ரா (WWE Raw) போட்டிகள் நடப்பது வழக்கம். அதில் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் போட்டி (World Heavyweight Championship) நடந்தது. இந்த போட்டியானது உலக சாம்பியன் குந்தர் மற்றும் சமி ஜெய்ன்க்கும் (Gunther vs. Sami Zayn) இடையே நடந்தது. யாராலும் அசைக்க முடியாத அளவு வெற்றியின் உச்சத்தில் இருந்தவர் தான் குந்தர். சுமார் 666 நாட்கள் பெல்டினை வைத்து இருந்தவர். Donnybrook Match On WWE Raw: கம்பினை வைத்து சுழட்டி அடிக்கும் டோனிபுரூக் போட்டி.. வீர தழும்புகளுடன் வெற்றி பெற்ற ஷீமஸ்..!
முன்னர் இவருக்கும் சமி ஜெய்ன்க்கும் இடையே நடந்த போட்டியில் சமி ஜெய்ன் வெற்றி பெற்றார். சாதாரண போட்டியாளராக வந்து குந்தரையே வென்றதால் சமி ஜெய்ன்க்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் குவிந்தனர். அதன்பின் குந்தர், சமி ஜெய்ன் உடன் விளையாட வரவேயில்லை. நேற்று எப்போதும் போன்று போட்டியானது கடும் வாக்குவாதங்களுடன் ஆரம்பமானது. அதில் தான் குந்தர் போட்டிக்குள் நுழைந்தார். கையினை கீழே தட்டுபவர்கள் தோல்வி அடைவர். அதே நேரம் போட்டியின் பொது மயக்கமடைந்தால் தோல்வி அடைவர். அதன்படி சமி ஜெய்ன் மயக்கமுற்றதால் குந்தர் உலக ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப் போட்டியின் வெற்றியாளர் ஆனார்.
சமி ஜெய்னை பொட்டலம் போட்டு அனுப்பிய குந்தர்: