அக்டோபர் 08, மிசோரி (Sports News): வாரம் வாரம் செவ்வாய்க்கிழமை (இந்திய நேரப்படி) டபிள்யூடபிள்யூஇ ரா (WWE Raw) போட்டிகள் நடப்பது வழக்கம். அதன்படி இந்த வாரம் டோனிபுரூக் போட்டியானது (Donnybrook Match) நடைபெற்றது. அதாவது கம்பியினை வைத்துக்கொண்டு சுழற்றி சுழற்றி மாறி மாறி ஒருத்தரைக்கொருவர் தாக்கிக் கொள்வர். கடைசிவரை நிற்பவரே அப்போட்டியின் வெற்றியாளர் ஆவர். இந்தப் போட்டியானது ஷீமஸ் மற்றும் பீட் டன் இடையே நடைபெற்றது. எப்போதும் போன்று போட்டியானது கடும் வாக்குவாதங்களுடன் ஆரம்பமானது. ஒருத்தருக்கு ஒருத்தர் ரத்தம் வரும்வரை தாக்கிய நிலையில் இப்போட்டியில் ஷீமஸ், பீட்டனை வீழ்த்தினார். இது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. IND Vs PAK Women's T20 WC 2024: களத்தில் அசத்திய பெண் சிங்கங்கள்.. 105 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான் அணி..! இந்திய அணிக்கு எளிய இலக்கு..!

வீர தழும்புகளுடன் வெற்றி பெற்ற ஷீமஸ்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)