IND Vs AUS: அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி.. வாழ்வா? சாவா?.. நேரலை பார்ப்பது எப்படி? விபரம் உள்ளே.!
இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வரும் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில், நாளை அரையிறுதி முதல் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் தொடர்பான அப்பேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் பெறவும்.
மார்ச் 03, துபாய் (Cricket News): பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) போட்டித்தொடரின், 12 வது மற்றும் இறுதி ஆட்டம் நேற்று இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ) அணிகள் இடையே துபாய் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. சாம்பியன்ஸ் டிராபியில் குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டு, இறுதியில் இந்தியா வெற்றி அடைந்தது. இதனால் குருப் ஏ பிரிவில் இந்தியா முன்னணி பெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல் (IND Vs AUS Semi Finals 2025):
சாம்பியன்ஸ் தொடரில் இந்தியா எதிர்கொண்ட தகுதி சுற்றுகளில் 3 க்கு 3 ல் வெற்றி அடைந்து, நாளை (04 மார்ச் 2025) அன்று, துபாயில் நடக்கும் அரையிறுதி சுற்றில் (ICC Champions Trophy Semi Finals 2025) ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia Cricket Team Timeline) மோதும் ஆட்டம், நாளை நண்பகல் 02:30 மணியளவில் தொடங்கி நடைபெறுகிறது. வாழ்வா? சாவா? என்ற நிலையில், அரையிறுதி சுற்றில் வெற்றி அடையும் அணி இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்படும். IND Vs NZ Highlights: இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் ட்ராபி 2025: வருண், குல்தீப், ஷ்ரேயாஸ் அசத்தல் ஆட்டம்.! இந்தியா திரில் வெற்றி.!
வருண் சக்கரவர்த்தியின் அசத்தல் ஆட்டம்:
இதுவரை தோல்வியை சந்திக்காமல் முன்னேறியுள்ள இந்திய அணி, அடுத்தடுத்தது இரண்டு தொடர் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியுற்று வெளியேறினால், நடப்பு ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கனவு கனவாகியேப்போகும். நேற்றைய நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், இந்தியா வருண் சக்கரவர்த்தி என்ற பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்திவிட்டது. இது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான வாய்ப்பை அளித்துள்ளது. நாளைய போட்டியில் இரண்டு அணியும் எப்படி முன்னேற போகின்றன என்பதை எதிர்பார்த்து இந்தியாவும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அணி & வீரர்கள் விபரம்:
ஷ்ரேயஸ் ஐயர், சுப்மன் ஹில், விராட் கோலி, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகம்மது சமி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் (Team Australia Squad) அணியில் ஜேக் பிரஷர், மார்னஸ் லபுஸங்னே, டார்விஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, கூப்பர் கனொளி, கிளன் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஷ், ஆடம் ஜாம்பா, பென் ட்வர்ஷுய்ஸ், நாதன் எல்லிஸ், சியான் அபோட், ஸ்பென்ஸர் ஜான்சன், தன்வீர் சங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
துபாய் வானிலை நிலவரம்:
போட்டி நடைபெறும் நாளில் துபாய் வானிலை பகல் நேரத்தில் 30 டிகிரி செல்ஸியஸ், இரவு நேரத்தில் 19 டிகிரி செல்ஸியஸ் என இருக்கலாம். மழைக்கான வாய்ப்புகள் இல்லை. காற்றின் வேகம் மணிக்கு 14 கிமீ என்ற நிலையில் இருக்கும்.
வெற்றி யாருக்கு? எதிர்பார்ப்பில் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி:
Who's making the final of #ChampionsTrophy 2025? 🤔 pic.twitter.com/0Zh787YjhF
— ICC (@ICC) March 3, 2025
(The above story first appeared on LatestLY on Mar 03, 2025 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

