Match 12: IND Vs NZ | ICC Champions Trophy 2025 (Photo Credit: @ICC X)

மார்ச் 02, துபாய் (Sports News): ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 (ICC Champions Trophy 2025) தொடரில், இன்று 12 வது போட்டியில் இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (India Vs New Zealand Cricket) மோதியது. சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், குரூப் ஏ பிரிவில் முதல் இடத்தை பெற இந்தியா - நியூசிலாந்து அணிகள் (India National Cricket Team Timeline Vs New Zealand Cricket Team Timeline) நேரடி மோதலில் ஈடுபட்ட நிலையில், முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பௌலிங் தேர்வு செய்தது. இதனால் இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்து, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது. இதனால் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. NZ Fallen of Wickets இந்தியாவுக்கே நீ சக்கரவர்த்தியாடா.. வலையில் விழுந்த முக்கிய விக்கெட் காலி.. ஜடேஜா, அக்சர், வருண் அசத்தல் பௌலிங்.! 

250 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா:

முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது ரோஹித் சாரா 17 பந்துகளில் 15 ரன்கள், எஸ். கில் 7 பந்துகளில் 2 ரன்கள், விராட் கோலி 14 பந்துகளில் 11 ரன்கள், எஸ். ஐயர் 98 பந்துகளில் 79 ரன்கள், அக்சர் 61 பந்துகளில் 42 ரன்கள், கேஎல் ராகுல் 29 பந்துகளில் 23 ரன்கள், ஹர்திக் பாண்டியா 45 பந்துகளில் 45 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 20 பந்துகளில் 16 ரன்கள், சமி 8 பந்துகளில் 5 ரன்கள், கே. யாதவ் 1 பந்தில் 1 ரன் என இந்திய அணி 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் பந்துவீசிய வீரர்களில் மேத் ஹென்றி 5 விக்கெட்டுகளை அதிகபட்சமாக கைப்பற்றி அசத்தினார். ஜெமிசன், வில், மிட்செல் சான்டனர், ரச்சின் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். IND Vs NZ: 9 விக்கெட் இழப்புக்கு இந்தியா 249 ரன்கள் குவிப்பு.. அசத்திய எஸ்.ஐயர், பாண்டியா.. கிளன் அசத்தல் பீல்டிங்.! 

Ravindra Jadeja Wicket | IND Vs NZ | 02 March 2025 (Photo Credit: @IPLCricketMatch / @the_sports_x X)
Ravindra Jadeja Wickets | IND Vs NZ | 02 March 2025 (Photo Credit: @IPLCricketMatch / @the_sports_x X)

நியூசிலாந்து அணி இலக்கை நெருங்க இயலாமல் தோல்வி:

250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அதிரடியாக களமிறங்கிய நியூசிலாந்து, தொடக்கத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டை இழந்தது. சான்டனர், விலையம்சன் நின்று ஆடினாலும், இறுதியில் அவர்களும் தங்களின் விக்கெட்டை இழந்தனர். நியூசிலாந்து அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் வில் யங் 35 பந்துகளில் 22 ரன்கள், ரச்சின் 12 பந்துகளில் 6 ரன்கள், வில்லியம்சன் 120 பந்துகளில் 81 ரன்கள், மிட்செல் 35 பந்துகளில் 17 ரன்கள், டாம் லேதம் 20 பந்துகளில்14 ரன்கள், கிளன் பிலிப்ஸ் 8 பந்துகளில் 12 ரன்கள், பிரேஸ்வெல் 3 பந்துகளில் 2 ரன்கள், சான்டனர் 31 பந்துகளில் 28 ரன்கள், ஹென்றி 4 பந்துகளில் 2 ரன்கள், ஜெமிசன் 4 பந்துகளில் 8 ரன்கள், வில் ஓ ரூர்க் 2 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தனர். 45.3 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்த நியூசிலாந்து அணி 205 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இந்திய அணியின் சார்பில் பந்துவீசியவர்களின் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஹர்திக், ஜடேஜா தலா 1 விக்கெட், குல்தீப் 2 விக்கெட் கைப்பற்றி இருந்தனர்.

இந்த வெற்றியின் வாயிலாக இந்திய கிரிக்கெட் அணி, சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலிய அணியை துபாய் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியை லாகூர் காதாபி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

தனது இறுதி ஓவரில் விக்கெட் எடுத்து அசத்திய வருண்:

கேன் வில்லியம்சன் விக்கெட் வீழ்த்திய அக்சர்:

டாம் லேதம் விக்கெட்டை தூக்கிய ஜடேஜா:

இந்திய அணிக்கே சக்கரவர்த்தியாக உணர்ந்த வருண்: