
மார்ச் 09, துபாய் (Cricket News): துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (India Vs New Zealand Cricket) மோதும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy 2025 Final) இறுதிப்போட்டி நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மிட்செல் சான்டனர், பேட்டிங் தேர்வு செய்தார். இதனால் இந்திய கிரிக்கெட் அணி பௌலிங் செய்கிறது. இன்றைய அடித்ததில் இரண்டு அணிகளும் மிகசிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் ஓவர் பாஸ்.. டீம் இந்தியாவுக்கு எலுமிச்சம்பழம், பச்சை மிளகாய் சேர்த்து திருஷ்டி சுத்திப்போட்ட மும்பை இந்தியன்ஸ்..!
3 விக்கெட் காலி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் வில் யங் (Will Young) 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். வருண் சக்கரவர்த்தியின் பந்தில், எல்பிடபிள்யு முறையில் வில் யங் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்நிலையில், நியூசிலாந்து அணியின் முக்கிய பேட்டர்களான ரச்சின் ரவீந்திரா (Rachin Ravindra) 29 பந்துகளில் 37 ரன்கள் அடித்து, குல்தீப்சின் பந்துகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். அதேபோல, கென் வில்லியம்சன் (Kane Williamson) 14 பந்துகளில் 11 ரன்கள் அடித்து, குல்தீப்சின் பந்துகளில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். இருவரும் அடுத்தடுத்து 10.1 மற்றும் 12.1 ஓவர்கள் முறையே விக்கெட் இழந்து வெளியேறினார்.
குல்தீப் யாதவ் முக்கிய விக்கெட் எடுத்த காணொளி:
CASTLED! | \ | #KuldeepYadav makes the impact straightaway, as #RachinRavindra is cleaned up courtesy a sharp googly! 💪🏻#ChampionsTrophyOnJioStar FINAL 👉 #INDvNZ | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 & Sports18-1!
📺📱 Start Watching FREE on… pic.twitter.com/VEl1RJOxfE
— Star Sports (@StarSportsIndia) March 9, 2025
கேன் வில்லியம்சன் விக்கெட் காலி:
SOFT DISMISSAL! 🎯#KuldeepYadav gets the big wicket of #KaneWilliamson, who spoons it back for an easy grab! 💥 Loud cheers, big celebrations—India on top! 🇮🇳🔥#ChampionsTrophyOnJioStar FINAL 👉 #INDvNZ | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2 &… pic.twitter.com/U8zqp7Qu22
— Star Sports (@StarSportsIndia) March 9, 2025