
மார்ச் 09, மும்பை (Sports News): துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (India Vs New Zealand Cricket) மோதும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy 2025 Final) இறுதிப்போட்டி நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மிட்செல் சான்டனர், பேட்டிங் தேர்வு செய்ததைத்தொடர்ந்து, அந்த அணியின் வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இந்தியா தனது பௌலிங் செய்து வருகிறது. இன்றைய ஆட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்னான தோல்வி வரலாற்றை மாற்றி எழுதும் தருணம் என்பதால், இந்தியா வெற்றிக்கான முனைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. MS Dhoni: பாரம்பரிய உடையுடன் எம்.எஸ் தோனி; சாரே.. தல மாஸ்.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
திருஷ்டி சுற்றிய மும்பை இந்தியன்ஸ்:
இந்நிலையில், ஐபிஎல் போட்டியில் களமிறங்க காத்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, இன்று சாம்பியன்ஸ் டிராபியை விளையாடும் இந்திய அணி வெற்றிபெற வேண்டி, இந்தியர்களின் பாரம்பரிய முறைப்படி திருஷ்டி சுற்றி போட்டுள்ளனர். எலுமிச்சை, பச்சை மிளகாய் சேர்த்து, இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர்கள் திருஷ்டி சுற்றிய விடியோவை வெளியிட்டு இருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆட்டோ கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடுமா? என்ற அஜித் - கருணாஸ் காமெடி காட்சிகளை போல, திருஷ்டி சுற்றினால் இந்தியா வெற்றி அடையுமா? எனவும் ஒருதரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணிக்கு மும்பை அணி சுத்திப்போட்டபோது:
🙏🤞#INDvNZ #MumbaiIndians #ChampionsTrophy pic.twitter.com/gCbeVKnW9u
— Mumbai Indians (@mipaltan) March 9, 2025