Varun Chakravarthy Takes Will Young Wicket (Photo Credit: @techsmart484675 / @the_sports_x X)

மார்ச் 09, துபாய் (Cricket News): துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், இன்று இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி (India Vs New Zealand Cricket) மோதும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy 2025 Final) இறுதிப்போட்டி நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் மிட்செல் சான்டனர், பேட்டிங் தேர்வு செய்தார். இதனால் இந்திய கிரிக்கெட் அணி பௌலிங் செய்கிறது. இன்றைய அடித்ததில் இரண்டு அணிகளும் மிகசிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதெல்லாம் ஓவர் பாஸ்.. டீம் இந்தியாவுக்கு எலுமிச்சம்பழம், பச்சை மிளகாய் சேர்த்து திருஷ்டி சுத்திப்போட்ட மும்பை இந்தியன்ஸ்..! 

முதல் விக்கெட்டை உறுதி செய்த இந்தியா:

இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சார்பில் விளையாடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் வில் யங் (Will Young) 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். வருண் சக்கரவர்த்தியின் பந்தில், எல்பிடபிள்யு முறையில் வில் யங் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். வருண் சக்கரவர்த்தியின் இரண்டாவது ஓவரில் ரச்சின் கேட்ச் கொடுத்த நிலையில், அந்த கேட்ச் ஷ்ரேயஸ் ஐயரால் தவறவிடப்பட்டது. அவர் தூரத்தில் இருந்து ஓடி வந்து விக்கெட் எடுக்க முற்பட்டபோதிலும், பந்தை தவறவிட்டார்.

வில் யங் (WIll Young Out) விக்கெட் காலி:

வில் யங் விக்கெட் பறிபோன வீடியோ: