Australia Women Vs Bangladesh Women: கேப்டன் அலிசா ஹீலி அதிரடி சதம்.. ஆஸ்திரேலியா மகளிர் அணி இமாலய வெற்றி..!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலியா மகளிர் அணி எதிர் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதிய 17வது லீக் போட்டியில், ஆஸ்திரேலியா மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Australia Women Vs Bangladesh Women (Photo Credit: @ESPNcricinfo X)

அக்டோபர் 16, விசாகப்பட்டினம் (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 16) ஆஸ்திரேலியா மகளிர் அணி - வங்கதேச மகளிர் அணிகள் மோதிய 17வது லீக் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. AUSW Vs BANW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு.. வங்கதேச மகளிர் அணி தடுமாற்றம்..!

ஆஸ்திரேலியா மகளிர் எதிர் வங்கதேசம் மகளிர் (Australia Women Vs Bangladesh Women):

இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணியின் கேப்டன் நிகர் சுல்தானா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 198 ரன்கள் மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக சோபானா மோஸ்டரி 66* ரன்கள், ரூப்யா ஹைதர் 44 ரன்கள் அடித்தனர். ஆஸ்திரேலியா மகளிர் அணி சார்பில் ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியா மகளிர் அபார வெற்றி:

இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா மகளிர் அணி 24.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் அடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் அலிசா ஹீலி அதிரடியாக விளையாடி 113* ரன்களும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 84* ரன்களும் அடித்தனர். அலிசா ஹீலி தொடர்ந்து தனது 2வது சதத்தை பதிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணிக்கு எதிராக சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியா மகளிர் அணி:

அலிசா ஹீலி (கேப்டன்), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், ஜார்ஜியா வேர்ஹாம், அலானா கிங், மேகன் ஸ்கட், டார்சி பிரவுன்.

வங்கதேச மகளிர் அணி:

ஃபர்கானா ஹோக், ரூப்யா ஹைதர், ஷர்மின் அக்தர், நிகர் சுல்தானா (கேப்டன்), சோபானா மோஸ்டரி, ரிது மோனி, ஷோர்னா அக்டர், ஃபஹிமா காதுன், ரபேயா கான், நிஷிதா அக்டர் நிஷி, ஃபரிஹா த்ரிஸ்னா.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement