England Women Vs Pakistan Women: இங்கிலாந்து மகளிர் - பாகிஸ்தான் மகளிர் 16வது லீக் போட்டி.. மழையால் ஆட்டம் பாதியில் ரத்து..!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இங்கிலாந்து மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய 16வது லீக் போட்டி, மழைக் காரணமாக பாதியில் ரத்தானது.

England Women Vs Pakistan Women (Photo Credit: @imfemalecricket X)

அக்டோபர் 15, கொழும்பு (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 15) இங்கிலாந்து மகளிர் அணி - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய 16வது லீக் போட்டி, இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெற்றது. ENGW Vs PAKW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; பாகிஸ்தான் மகளிர் அணி அபார பந்துவீச்சு.. வெற்றி பெற 134 ரன்கள் இலக்கு..!

இங்கிலாந்து மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணி (England Women Vs Pakistan Women):

இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பாத்திமா சனா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 25 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 79 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழைக் குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் 3 மணிநேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, போட்டி 31 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 31 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக சார்லோட் டீன் 33 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் சார்பில் கேப்டன் பாத்திமா சனா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டி ரத்து:

இதனையடுத்து 134 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் மகளிர் அணி களமிறங்கியது. 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் அடித்திருந்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. மழைக் காரணமாக ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் புள்ளிப்பட்டியலில் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம், இங்கிலாந்து மகளிர் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

இங்கிலாந்து மகளிர் அணி:

டாமி பியூமண்ட், ஆமி ஜோன்ஸ், ஹீதர் நைட், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), சோபியா டங்க்லி, எம்மா லாம்ப், ஆலிஸ் கேப்ஸி, சார்லோட் டீன், சாரா க்ளென், எம் ஆர்லாட், லின்சி ஸ்மித்.

பாகிஸ்தான் மகளிர் அணி:

முனீபா அலி, ஒமைமா சோஹைல், சித்ரா அமின், அலியா ரியாஸ், நடாலியா பெர்வைஸ், பாத்திமா சனா (கேப்டன்), சித்ரா நவாஸ், ரமீன் ஷமிம், டயானா பைக், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement