அக்டோபர் 15, கொழும்பு (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 15) இங்கிலாந்து மகளிர் அணி - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் 16வது லீக் போட்டி, இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறுகிறது. ENGW Vs PAKW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; இங்கிலாந்து மகளிர் அணி 79/7 என தடுமாற்றம்.. மழையால் ஆட்டம் பாதிப்பு..!
இங்கிலாந்து மகளிர் அணி எதிர் பாகிஸ்தான் மகளிர் அணி (England Women Vs Pakistan Women):
நாட் ஸ்கைவர்-பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி, பாத்திமா சனா தலைமையிலான பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பாத்திமா சனா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். 25 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 79 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழைக் குறுக்கிட்டது.
பாகிஸ்தான் அபாரம்:
இதனால், ஆட்டம் 3 மணிநேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, போட்டி 31 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 31 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக சார்லோட் டீன் 33 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் சார்பில் கேப்டன் பாத்திமா சனா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
இங்கிலாந்து மகளிர் அணி:
டாமி பியூமண்ட், ஆமி ஜோன்ஸ், ஹீதர் நைட், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), சோபியா டங்க்லி, எம்மா லாம்ப், ஆலிஸ் கேப்ஸி, சார்லோட் டீன், சாரா க்ளென், எம் ஆர்லாட், லின்சி ஸ்மித்.
பாகிஸ்தான் மகளிர் அணி:
முனீபா அலி, ஒமைமா சோஹைல், சித்ரா அமின், அலியா ரியாஸ், நடாலியா பெர்வைஸ், பாத்திமா சனா (கேப்டன்), சித்ரா நவாஸ், ரமீன் ஷமிம், டயானா பைக், நஷ்ரா சந்து, சாடியா இக்பால்.