ENGW Vs RSAW Semi-Final 1: செமி பைனலில் கேப்டன் லாரா வால்வார்ட் அபார சதம்.. தென்னாப்பிரிக்கா மகளிர் 319 ரன்கள் குவிப்பு..!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 ஒருநாள் தொடரில், இங்கிலாந்து மகளிர் எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் முதலாவது அரையிறுதி போட்டியில், முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 319 ரன்கள் அடித்துள்ளது.

ENGW Vs RSAW Semi-Final 1: செமி பைனலில் கேப்டன் லாரா வால்வார்ட் அபார சதம்.. தென்னாப்பிரிக்கா மகளிர் 319 ரன்கள் குவிப்பு..!
ENGW Vs RSAW Semi-Final 1 (Photo Credit: @Superbru X)

அக்டோபர் 29, கவுகாத்தி (Sports News): ஐசிசி மகளிர் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கியது. லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இத்தொடர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 29) இங்கிலாந்து மகளிர் அணி - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மோதும் முதலாவது அரையிறுதி போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது. AUS Vs IND, 1st T20I: இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டி20ஐ.. மழையால் ஆட்டம் பாதியில் ரத்து..!

இங்கிலாந்து மகளிர் எதிர் தென்னாப்பிரிக்கா மகளிர் (England Women Vs South Africa Women):

இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் நாட் ஸ்கைவர்-பிரண்ட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 319 ரன்கள் அடித்துள்ளது. அதிகபட்சமாக கேப்டன் லாரா வால்வார்ட் அபாரமாக விளையாடி 143 பந்தில் 169 ரன்கள் அடித்து அசத்தினார். டாஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்கள், மரிசான் கேப் 42 ரன்கள், சோலி ட்ரையான் 33* ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து சார்பில் சோஃபி எக்லெஸ்டோன் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இங்கிலாந்து மகளிர் அணி:

ஆமி ஜோன்ஸ், டாமி பியூமண்ட், ஹீதர் நைட், டேனியல் வயட்-ஹாட்ஜ், நாட் ஸ்கைவர்-பிரண்ட் (கேப்டன்), சோபியா டங்க்லி, ஆலிஸ் கேப்சி, சார்லோட் டீன், சோஃபி எக்லெஸ்டோன், லின்சி ஸ்மித், லாரன் பெல்.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி:

லாரா வால்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், அன்னேரி டெர்க்சன், அன்னேக் போஷ், மரிசான் கேப், சினாலோ ஜஃப்தா, சோலி ட்ரையான், நாடின் டி கிளர்க், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ ம்லபா.

(The above story first appeared on LatestLY on Oct 29, 2025 06:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).