AUS Vs IND, 1st T20I (Photo Credit: @sportstarweb X)

அக்டோபர் 29, கான்பெரா (Sports News): இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த ஒருநாள் தொடரில், இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா 2-1 என தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா (IND Vs AUS T20I) அணிகள் மோதிய முதலாவது டி20ஐ போட்டி, கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று (அக்டோபர் 29) நடைபெற்றது. AUS Vs IND 1st T20I, Toss: ஆஸ்திரேலியா - இந்தியா முதலாவது டி20ஐ.. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..!

ஆஸ்திரேலியா எதிர் இந்தியா டி20ஐ தொடர் (Australia Vs India T20I Series 2025):

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 97 ரன்கள் அடித்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. தொடர்ந்து, கனமழை பெய்த காரணத்தினால் முதல் டி20ஐ போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்தியா சார்பில் சுப்மன் கில் 37* ரன்கள், சூர்யகுமார் யாதவ் 39* ரன்கள் அடித்தனர்.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஷ் பிலிப், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னேமன், ஜோஷ் ஹேசில்வுட்.

இந்திய அணி வீரர்கள்:

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.