RSAW Vs ENGW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; தென்னாப்பிரிக்கா மகளிர் படுதோல்வி.. இங்கிலாந்து மகளிர் அணி இமாலய வெற்றி..!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 4வது போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

England Women Vs South Africa Women (Photo Credit: @sportstarweb X)

அக்டோபர் 03, கவுகாத்தி (Sports News): ஐசிசி பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup 2025), கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின், இறுதிப்போட்டி நவம்பர் 02ஆம் தேதி நடைபெறும். இந்நிலையில், இன்று (அக்டோபர் 03) தென்னாப்பிரிக்கா மகளிர் அணி - இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் 4வது லீக் போட்டி, கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்கா மகளிர் அணி, நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. IND Vs WI 1st Test, Day 2: துருவ் ஜுரெல் - ரவீந்திர ஜடேஜா இணை அபார பேட்டிங்.. இந்தியா 286 ரன்கள் முன்னிலை..!

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி எதிர் இங்கிலாந்து மகளிர் அணி (England Women Vs South Africa Women):

இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணியின் கேப்டன் நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா மகளிர் அணி 20.4 ஓவர்களில் 69 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக சினாலோ ஜஃப்டா 22 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை இழந்தனர். இங்கிலாந்து மகளிர் அணி சார்பில் லின்சி ஸ்மித் 3, நாட் ஸ்கிவர்-ப்ரண்ட், சார்லோட் டீன், சோஃபி எக்லெஸ்டோன் தலா 2 விக்கெட்கள், லாரன் பெல் 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி:

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி 14.1 ஓவர்களில் 73 ரன்கள் அடித்தது. இதன்மூலம். இங்கிலாந்து மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீராங்கனைகள் ஆமி ஜோன்ஸ் 40* ரன்கள், டாமி பியூமண்ட் 21* ரன்கள் அடித்தனர். இதன்மூலம், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி மோசமான தோல்வியை பதிவு செய்தது.

தென்னாப்பிரிக்கா மகளிர் அணி:

லாரா வோல்வார்ட் (கேப்டன்), டாஸ்மின் பிரிட்ஸ், சுனே லூஸ், மரிசான் கேப், அன்னேக் போஷ், சினாலோ ஜஃப்டா, க்ளோ ட்ரையோன், நாடின் டி க்ளெர்க், மசபாடா கிளாஸ், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ மலாபா.

இங்கிலாந்து மகளிர் அணி:

டாமி பியூமண்ட், ஆமி ஜோன்ஸ், ஹீதர் நைட், நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் (கேப்டன்), சோபியா டங்க்லி, எம்மா லாம்ப், ஆலிஸ் கேப்ஸி, சார்லோட் டீன், சோஃபி எக்லெஸ்டோன், லின்சி ஸ்மித், லாரன் பெல்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement