அக்டோபர் 03, அகமதாபாத் (Sports News): வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (IND Vs WI) விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகளும், இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, நேற்று (அக்டோபர் 02) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். RSAW Vs ENGW: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025; 69 ரன்களுக்கு சுருண்டது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி.. இங்கிலாந்து மகளிர் அபார பந்துவீச்சு..!
இந்தியா எதிர் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் 2025 (India Vs West Indies Test Series 2025):
அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள், ஷாய் ஹோப் 26 ரன்கள், கேப்டன் ரோஸ்டன் சேஸ் 24 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இந்தியா சார்பில் முகமது சிராஜ் 4, ஜஸ்பிரித் பும்ரா 3, குல்தீப் யாதவ் 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36, கேஎல் ராகுல் 100, சாய் சுதர்சன் 7, சுப்மன் கில் 50, துருவ் ஜுரெல் 125 ரன்கள் அடித்தனர். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 128 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 448 ரன்கள் அடித்தது. ரவீந்திர ஜடேஜா 104*, வாஷிங்டன் சுந்தர் 9* ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா 286 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்திய அணி வீரர்கள்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:
ஜான் கேம்பல், டேகனரைன் சந்தர்பால், அலிக் அதனேஸ், பிராண்டன் கிங், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரீவ்ஸ், காரி பியர், ஜோமல் வாரிக்கன், ஜோஹன் லேன், ஜெய்டன் சீல்ஸ்.