IND Vs WI KL Rahul (Photo Credit: @BCCI X)

அக்டோபர் 14, டெல்லி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், இந்தியா தேசிய கிரிக்கெட் அணி Vs மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs West Indies National Cricket Team) மோதின. போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 518 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. தொடர்ந்து விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. India Vs West Indies Highlights: இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஹைலைட்ஸ்.. 2வது இன்னிங்ஸ் நிலவரம் என்ன? 

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் (India Vs West Indies Test Cricket):

அதனைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்திய கிரிக்கெட் அணி 121 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்களில் கே.எல். ராகுல் 108 பந்துகளில் 58 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். சாய் சுதர்சன் 76 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய கிரிக்கெட் அணி 35.2 ஓவரில் 124 ரன்கள் அடித்து அசத்தல் வெற்றி அடைந்தது. இதனால் இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையேயான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.

கே.எல். ராகுலின் அதிரடி ஆட்டம்: