GT Vs MI Eliminator: மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி.. குஜராத் போராடி தோல்வி..!

டாடா ஐபிஎல் 2025 தொடரின், குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியில், மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

GT Vs MI Eliminator: மும்பை இந்தியன்ஸ் அசத்தல் வெற்றி.. குஜராத் போராடி தோல்வி..!
GT Vs MI Eliminator (Photo Credit: @IPL X)

மே 30, முல்லான்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. நேற்று (மே 29) நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி பைனலுக்கு சென்றது. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தை பிடித்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் (GT Vs MI) அணிகள் இன்று (மே 30) எலிமினேட்டர் போட்டியில் மோதின. GT Vs MI Eliminator: மும்பை இந்தியன்ஸ் அதிரடி பேட்டிங்.. குஜராத் வெற்றி பெற 229 ரன்கள் இமாலய இலக்கு..!

குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் (Gujarat Titans Vs Mumbai Indians):

இப்போட்டி, நியூ சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா - ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியான தொடக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில், பேர்ஸ்டோவ் 47 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் நடையை கட்டினார். மறுபுறம், ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் (81 ரன்கள்) கடந்து அவுட்டானார். திலக் வர்மா 11 பந்துகளில் 25 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். ஹர்திக், 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது.

மும்பை வெற்றி:

இதனையடுத்து, குஜராத் அணி 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை துரத்தியது. ஆரம்பத்திலேயே கில் 1 ரன்னில் போல்ட் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த குஷால் மென்டிஸ் 20 ரன்னில் நடையை கட்டினார். இதன்பின்னர், ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் - வாசி சுந்தர் அதிரடியாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சுந்தர் 48 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை 2 ரன்னில் தவறவிட்டார். அடுத்து, சாய் சுதர்சன் 80 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இறுதியில், குஜராத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 208 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் 2வது தகுதி சுற்றுப் போட்டியில், பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

(The above story first appeared on LatestLY on May 30, 2025 11:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).