CSG Vs NRK: டிஎன்பிஎல் 6வது மேட்ச்.. சேப்பாக் - நெல்லை அணிகள் இன்று மோதல்..!

2025 டிஎன்பிஎல் தொடரின் 6வது லீக் போட்டியில், இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

CSG Vs NRK: டிஎன்பிஎல் 6வது மேட்ச்.. சேப்பாக் - நெல்லை அணிகள் இன்று மோதல்..!
CSG Vs NRK (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 09, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் கடந்த ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. நேற்று (ஜூன் 08) நடைபெற்ற ஆட்டத்தில், திண்டுக்கல் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. IND Vs ENG Test Series 2025: லண்டன் சென்றது இந்திய கிரிக்கெட் அணி..!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் (Chepauk Super Gillies Vs Nellai Royal Kings):

இந்நிலையில், இன்று (ஜூன் 09) சேப்பாக் சூப்பர் கில்லீஸ் எதிர் நெல்லை ராயல் கிங்ஸ் (CSG Vs NRK, Match 6) அணிகள் மோதுகின்றன. பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, அருண் கார்த்திக் தலைமையிலான நெல்லை ராயல் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சேப்பாக் அணி 1 போட்டியிலும், நெல்லை அணி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்கள்:

பாபா அபராஜித் (கேப்டன்), விஜய் ஷங்கர், ஆஷிக் ரெஹ்மான், அர்ஜுன் மூர்த்தி, அபிஷேக் தன்வர், தினேஷ் ராஜ் எஸ், என் சுனில் கிருஷ்ணா, கிருபாகர் ரவீந்தர், பிரேம் குமார், ஸ்வப்னில் சிங், ராஜலிங்கம் ஜி, ஆர்எஸ் மோகித் ஹரிஹரன், ஜகதீசன் நாராயண், ஆர் ராஜன், எம் சிலம்பரசன், அக்ரம் கான், ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆர், டிடி லோகேஷ் ராஜ், ரோஹித் சுதர்.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி வீரர்கள்:

அருண் கார்த்திக் (கேப்டன்), பிஎஸ் நிர்மல் குமார், சச்சின் ரதி, எஸ் விஜய குமார், சோனு யாதவ், ராக்கி பாஸ்கர், அஜய் கிருஷ்ணன், ஜே ரோஹன், இம்மானுவேல் செரியன், முகமது அத்னான் கான், ரிதிக் ஈஸ்வரன், அஜிதேஷ் குருஸ்வாமி, டி சந்தோஷ் குமார், என்எஸ் ஹரிஷ், வள்ளியப்பன் யுதீஸ்வரன், செல்வகணபதி எஸ், கரண் சம்பத், எஸ் ரிஷீக் குமார், அதிஷ் எஸ் ஆர், அருண் பாலா.

(The above story first appeared on LatestLY on Jun 09, 2025 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).