DD Vs SMP Highlights: ஷிவம் சிங்கின் அதிரடி சதத்தால் திண்டுக்கல் அணி அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்..!

நேற்று நடைபெற்ற 24-வது லீக் போட்டியில் மதுரை அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் அணி அபார வெற்றி பெற்றது.

DD Vs SMP Highlights: ஷிவம் சிங்கின் அதிரடி சதத்தால் திண்டுக்கல் அணி அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்..!
DD Vs SMP Highlights (Photo Credit: @StarSportsTamil X)

ஜூலை 27, திண்டுக்கல் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024) இருபது ஓவர் கிரிக்கெட் தொடரின் 24-வது போட்டி திண்டுக்கல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சீகம் மதுரை பாந்தர்ஸ் (DD Vs SMP) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் ஷிவம் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 201 ரன்கள் குவித்தது. Paris Olympics 2024: கோலாகலமாக தொடங்கியது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024; விறுவிறுப்பாக நடைபெறும் ஆட்டங்கள்.!

அதிரடியாக விளையாடிய ஷிவம் சிங் 57 பந்துகளில் 6 பவுண்டரி, 10 சிக்ஸர் உள்பட 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர், 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர் சுரேஷ் லோகேஷ்வர் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜெகதீசன் கௌசிக் 28 ரன்கள் எடுக்கவே, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆட்டநாயகன் விருதை அதிரடியாக விளையாடி சதமடித்த ஷிவம் சிங் பெற்று சென்றார்.

(The above story first appeared on LatestLY on Jul 27, 2024 11:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).