Paris Olympics (Photo Credit: @Paris2024 X)

ஜூலை 25, பாரிஸ் (Sports News): பாரிஸில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் (Olympics 2024 - Paris) 26 ஜூலை 2024 இன்று முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா சார்பில் 117 வீரர்கள் பல்வேறு பிரிவுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். முதற்கட்டமாக ஃபுட்பால், ஹேண்ட் பால், ரக்பி ஆகிய ஆட்டங்கள் தொடங்கிய நிறைவு பெற்றுள்ளன. மொத்தமாக சர்வதேச அளவில் 10,214 க்கும் அதிகமான வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டியில், 32 விளையாட்டுகளில் 329 பிரிவாக போட்டிகள் நடத்தப்படுகின்றன. 206 நாடுகள் இந்த போட்டிகளில் பங்கேற்று தங்களின் அணியின் வெற்றிக்காக எதிர்நோக்கி காத்திருக்கின்றன. Argentina Vs Morocco Paris Olympics: பாரிஸ் ஒலிம்பிக்கில் அர்ஜென்டினா வீரர்களை தாக்கிய ரசிகர்கள்.. முதல் நாளே பெரும் பரபரப்பு..!

விறுவிறுப்பாக நடைபெறும் ஆட்டங்கள்:

வில்வித்தை பிரிவில் தீரஜ், தருண்தீப் ராய் ஆகியோர் இந்திய அணியின் சார்பில் களம்கண்டு காலிறுதிக்கு முன்னேறி இருக்கின்றனர். நேற்று நடைபெற்ற கால்பந்து ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் கனடா - நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்ட நிலையில், கனடா 2 க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றி அடைந்தது. அதேபோல, குரூப் சி பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜப்பான் அணிகள் மோதிக்கொண்ட நிலையில், ஸ்பெயின் 2 கோல் அடித்து வெற்றி அடைந்தது. குரூப் பி பிரிவில் அமெரிக்கா - சிம்பாவே அணிகள் மோதிக்கொண்ட நிலையில், அமெரிக்கா மூன்று கோள்கள் அடித்து வெற்றி அடைந்தது. குரூப் ஏ பிரிவில் பிரான்ஸ் - கொலம்பியா அணிகள் மோதிக்கொண்ட நிலையில் பிரான்ஸ் அணி மூன்று கோள்கள் அடித்து வெற்றி அடைந்தது. NRK Vs ITT Highlights: திருப்பூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி; நடராஜன் அபார பந்துவீச்சு..!

பெண்களுக்கான ஹேண்ட் பால் (Handball) பிரிவில் குரூப் ஏ-வில் ஸ்வீடன் - நார்வே அணிகள் மோதிக்கொண்ட இந்த ஆட்டத்தில், ஸ்வீடன் அணி 32 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. ரக்பி (Rugby Sevens) ஆட்டத்தில் ஜப்பான் - உருகுவே, சோமா - கென்யா ஆகிய நாடுகள் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தேர்வு பெற்றுள்ளன. செமி பைனல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பிரான்ஸ் அணியும், பிஜி - ஆஸ்திரேலியா அணியும் களம் காண்கின்றன.