ITT Vs CSG Toss Update: திருப்பூர் Vs சேப்பாக் டாஸ் அப்டேட்.. சேப்பாக் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!

2025 டிஎன்பிஎல் தொடரின், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதும் 2வது லீக் போட்டியில், சேப்பாக் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

ITT Vs CSG Toss Update: திருப்பூர் Vs சேப்பாக் டாஸ் அப்டேட்.. சேப்பாக் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு..!
ITT Vs CSG Toss Update (Photo Credit: @TNPremierLeague X)

ஜூன் 06, கோவை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2025) கிரிக்கெட் தொடரின், 9வது சீசன் நேற்று (ஜூன் 05) தொடங்கியது. ஜூன் 05ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 06ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறுகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில், கோவை அணியை வீழ்த்தி நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ITT Vs CSG: டிஎன்பிஎல் 2வது லீக் போட்டி.. திருப்பூர் - சேப்பாக் அணிகள் இன்று பலப்பரீட்சை..!

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Idream Tiruppur Tamizhans Vs Chepauk Super Gillies):

இந்நிலையில், இன்று (ஜூன் 06) ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் எதிர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (ITT Vs CSG, Match 2) அணிகள் மோதுகின்றன. சாய் கிஷோர் தலைமையிலான ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி, பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சேப்பாக் அணி 6 போட்டியிலும், திருப்பூர் அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவில்லை. இப்போட்டியில், டாஸ் வென்ற சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபராஜித் முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

(The above story first appeared on LatestLY on Jun 06, 2025 06:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).