ENG Vs WI Highlights: இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி; முதல் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ்..!
இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.
ஜூன் 20, செயிண்ட் லூசியா (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் லீக் ஆட்டங்கள் முடிந்து, இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் (ENG Vs WI) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடியது. UGC-NET 2024 Exam Cancel: 2024-ஆம் ஆண்டு யுஜிசி-நெட் தேர்வு ரத்து; இந்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு..!
பின்னர், சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்த போதிலும், 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 180 ரன்களை அடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக சார்லஸ் 38 ரன்கள் அடித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடியது. கேப்டன் பட்லர் அவுட் ஆன போதும், பிலிப் சால்ட் மற்றும் பேர்ஸ்டோவ் ஜோடி இணைந்து அதிரடியாக விளையாடி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 181 ரன்களை எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் பிலிப் சால்ட் 87 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 48 ரன்களும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். மேலும், இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு பங்காற்றிய பிலிப் சால்ட் ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார்.
PHIL SALT SMASHED 4,6,4,6,6,4 IN ONE OVER vs SHEPHERD. 🥶#ENGvsWI #ENGvWI
— 𝐍𝐢𝐫𝐚𝐣 (@CricketRiot) June 20, 2024
(The above story first appeared on LatestLY on Jun 20, 2024 11:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

