ஜூன் 20, டெல்லி (Delhi News): தேசிய தேர்வு முகமை (NTA) UGC-NET 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வை ஓஎம்ஆர் சீட் (OMR)முறையில், கடந்த ஜூன் 18-ஆம் தேதி அன்று நாட்டின் பல்வேறு நகரங்களில் இரண்டு கட்டங்களாக நடத்தியது. இந்நிலையில், நேற்றைய தினம் (ஜூன் 19), பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தேர்வு குறித்து உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின், தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவிலிருந்து சில தரவுகளை பெற்றது. இவைகள் மேற்கூறிய தேர்வின் ஒருமைப்பாடு சமரசம் செய்யப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. TN Assembly Session: முதல் நாள் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?.. விபரம் இதோ.!
தேர்வு செயல்முறையின் முழு வெளிப்படைத்தன்மை மற்றும் புனிதத்தன்மையை உறுதி செய்வதற்காக, இந்திய அரசின் கல்வி அமைச்சகம், UGC-NET ஜூன் 2024-ஆம் ஆண்டிற்கான தேர்வை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. மேலும், ஒரு புதிய தேர்வு நடத்தப்படும், அதற்கான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழுமையான விசாரணைக்காக மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்துள்ளது.
2024-ஆம் ஆண்டிற்கான நீட் (யுஜி) தேர்வு தொடர்பான விஷயத்தில், ஏற்கனவே கருணை மதிப்பெண்கள் தொடர்பான பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டுள்ளது. பாட்னாவில் தேர்வு நடத்துவதில் ஏற்பட்ட சில முறைகேடுகள் குறித்து, பீகார் காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவிடம் விரிவான அறிக்கையை கேட்டுள்ளது. இந்த அறிக்கை வந்தவுடன் அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும். தேர்வுகளின் நம்பகத் தன்மையை உறுதி செய்யவும், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும் அரசு உறுதியளிக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் மற்றும் இதோடு தொடர்புடைய அமைப்புகளுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.