BAN Vs NZ Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி 2025; பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி.. தாக்குப்பிடிக்குமா வங்கதேசம்..? இன்று பலப்பரீட்சை..!
சாம்பியன் டிராபி 2025 தொடரின் 6வது லீக் போட்டியில், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் ராவல்பிண்டி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
பிப்ரவரி 24, ராவல்பிண்டி (Sports News): பாகிஸ்தான் நாட்டில் ஐசிசி சாம்பியன் டிராபி 2025 (ICC Champions Trophy 2025) கிரிக்கெட் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 24) நடக்கும் 6வது போட்டியில் வங்கதேசம் - நியூசிலாந்து (BAN Vs NZ) அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, ராவல்பிண்டி (Rawalpindi) மைதானத்தில் நடைபெறுகிறது. இன்று மதியம் 2.30 மணியளவில் போட்டி தொடங்கும். IND Vs PAK Highlights: அசத்திய இந்தியா .. பாகிஸ்தானுக்கு எதிராக திரில் வெற்றி.. விராட் கோலி சதம் அடித்து அபாரம்.!
வங்கதேசம் Vs நியூசிலாந்து (Bangladesh Vs New Zealand):
இந்நிலையில், மிட்செல் சான்ட்னர் (Mitchell Santner) தலைமையிலான நியூசிலாந்து அணி இத்தொடரில் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. இன்று நடைபெறும் போட்டியில், வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெரும் முனைப்பில் களமிறங்கும். மறுபுறம், நஜ்மூல் ஹுசைன் சாண்டோ (Najmul Hossain Shanto) தலைமையிலான வங்கதேச அணி வெற்றி பெற தீவிரமாக முயற்சிக்கும். இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதி வாய்ப்பு இருக்கும். எனவே, இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Feb 24, 2025 08:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

