RCB Vs SRH: இஷான் கிஷன் அதிரடி ஆட்டம்.. ஆர்சிபி வெற்றி பெற 232 ரன்கள் இமாலய இலக்கு..!
ஐபிஎல் 2025 தொடரில், சன்ரைசர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Sunrisers vs Royal Challengers) போட்டியில், ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 231 ரன்கள் குவித்துள்ளது.
மே 23, லக்னோ (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், இன்று (மே 23) 65வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (RCB Vs SRH, Match 65) அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் தொடர் மழை காரணமாக, லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. ஏற்கனவே, குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. RCB Vs SRH: ஆர்சிபி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.. வெற்றிப்பயணம் தொடருமா?
சன்ரைசர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Sunrisers vs Royal Challengers):
இந்நிலையில், இன்றைய போட்டியில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா - ட்ராவிஸ் ஹெட் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. சர்மா 34, ஹெட் 17 ரன்னிலும் அவுட்டாகினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிளாசன் 24 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
இமாலய இலக்கு:
இருப்பினும், இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 94 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 231 ரன்கள் குவித்துள்ளது. ஆர்சிபி அணி தரப்பில் ரோமரியோ செபர்டு 2 விக்கெட்களை வீழ்த்தினார். ஆர்சிபி அணி வெற்றிக்கு 232 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on May 23, 2025 09:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

