RCB Vs SRH Toss Update (Photo Credit: @irishabhparmar X)

மே 23, லக்னோ (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரில், நேற்று (மே 22) நடைபெற்ற போட்டியில், குஜராத் அணியை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இன்று (மே 23) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (RCB Vs SRH, Match 65) அணிகள் மோதுகின்றன. 65வது லீக் போட்டி, தொடர் மழை காரணமாக பெங்களூருவில் இருந்து லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே, குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. GT Vs LSG: லக்னோ 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.. ஷாருக்கான் போராட்டம் வீண்..!

சன்ரைசர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் (Sunrisers vs Royal Challengers):

இந்நிலையில், இன்றைய போட்டியில் ஜித்தேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு‍ அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.