IND Vs AFG: இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிகள் தொடக்கம்: விபரம் இதோ.!

டி20 போட்டிகளில் மோதவுள்ள இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் தீவிர களப்பயிற்சி மேற்கொண்டுள்ளன.

IND Vs AFG: இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டிகள் தொடக்கம்: விபரம் இதோ.!
IND Vs AFG T20i 2024 | Rohit Sharma | Hashmatullah Shahidi (Photo Credit @SPORTYVISHAL X)

ஜனவரி 11, மொஹாலி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் (IND Vs AFG T20i) கிரிக்கெட் அணி டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து மோதவுள்ளது. இந்த போட்டிகளுக்காக இந்திய அணி வீரர்கள் தயாராக இருக்கின்றனர். 11ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி, முதல் போட்டி இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மாலை 7 மணி அளவில், மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி: ரோகித் சர்மா (Rohit Sharma) தலைமையேற்று வழிநடத்தும் இந்திய அணியில் சுப்னம் ஹில், யாசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோஹ்லி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜித்தேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், சிவம் டியூப், வாஷிங்டன் சுந்தர், அக்பர் படேல். ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். Math Teacher Relationship With Student: 16 வயது மாணவனை கணக்கு பண்ணிய டீச்சர்: மகனுக்கு பச்சைக்கொடி காண்பித்த தந்தையின் அதிர்ச்சி செயல்.! 

நேரலையில் பார்க்க: இந்த போட்டிக்காக மொஹாலியில் இரு நாட்டு அணிகளும் முகாமிட்டுள்ள நிலையில், கடும் குளிரில் பயிற்சி எடுத்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோவும் இன்று பிசிசிஐ நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது. ஆப்கானிஸ்தான் அணியை ஹஸ்மத்துல்லா ஷாகிதி கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஹாட் ஸ்டார் & ஜியோ சினிமா ஆகிய செயலிகளிலும் பார்க்கலாம்.

(The above story first appeared on LatestLY on Jan 11, 2024 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).