![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2024/01/Math-Teacher-Hailey-Nichelle-Clifton-Carmack-Photo-Credit-@iSeeRacist-X-380x214.jpg)
ஜனவரி 11, மிஸவ்ரி (World News): அமெரிக்காவில் உள்ள மிஸவ்ரி (Missouri) மாகாணம் லாகோய் நகரில், லாகோய் உயர்நிலைப்பள்ளி (Laquey Primary Higher Secondary School) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஹெய்லி நிச்செல் கிளிஃப்டன்-கார்மேக் (வயது 26) (Hailey Nichelle Clifton-Carmack).
16 வயது மாணவருடன் அதிர்ச்சி செயல்: இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். 26 வயதாகும் கணித ஆசிரியை கார்மேக், தன்னிடம் பயின்று வந்த 16 வயது மாணவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். சமீபத்தில் இதுகுறித்த தகவல் வெளியாகி விசாரணை நடத்தப்பட்டதில் இந்த உண்மை அம்பலமாகி இருக்கிறது. College Girl Suicide: தற்கொலை செய்வதை பதிவு செய்தவாறு உயிரைவிட்ட இளம்பெண்.. விடுதி அறையில் நடந்தது என்ன?.. கல்லூரி மாணவியின் விபரீத முடிவு.!
மாணவரின் தந்தையும் ஒத்துழைப்பு: இந்த விஷயம் மாணவரின் தந்தைக்கு தெரியவந்தபோதிலும், அவர் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் பழக்கத்தை தொடர ஒத்துழைத்து இருக்கிறார். இதனையடுத்து, ஆசிரியை கார்மேக் மற்றும் மாணவியின் தந்தை ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் கைது: இந்த விஷயம் தொடர்பாக வெளியான ரகசிய தகவலின் பெயரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், குற்றசாட்டை உறுதி செய்து ஆசிரியை மற்றும் மாணவனின் தந்தை ஆகிய வரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஆசிரியை, தலைமறைவாகிய பின் டெக்ஸாஸில் கைது செய்யப்பட்டார்.