IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா இரண்டாவது டி20ஐ.. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!

India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் இரண்டாவது டி20ஐ (IND Vs AUS 2nd T20I) போட்டி இன்று (அக்.31) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.

IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா இரண்டாவது டி20ஐ.. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!
IND Vs AUS 2nd T20I Toss (Photo Credit : @BCCI)

அக்டோபர் 31, மெல்போர்ன் (Sports News): ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) உடன் ஒரு நாள் போட்டிகளில் மோதியது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி அடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது இந்தியா Vs ஆஸ்திரேலியா அணிகள் (India Vs Australia) மோதும் டி20 போட்டிகள் தொடங்க உள்ளன.

இந்தியா - ஆஸ்திரேலியா டி20ஐ போட்டிகள் (India Vs Australia T20I Series 2025):

இந்த போட்டியின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது ஆட்டம் அக்டோபர் 31ஆம் தேதியும், மூன்றாவது ஆட்டம் நவம்பர் 02 ஆம் தேதியும் நடைபெறுகிறது. டி20ஐ போட்டியின் 2 வது ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இன்று இந்திய நேரப்படி மதியம் 01:45 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியை நேரலையில் ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) செயலி, தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் (Sony Sports) பக்கத்திலும் பார்க்கலாம். ஒரு நாள் போட்டியில் தொடரை கைப்பற்ற தவறிய இந்தியா, டி20ஐ போட்டிகளில் தொடரை கைப்பற்றுமா? அல்லது ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியாவின் தோல்வி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. AUS Vs IND, 1st T20I: இந்தியா - ஆஸ்திரேலியா முதலாவது டி20ஐ.. மழையால் ஆட்டம் பாதியில் ரத்து..!

இந்தியா Vs ஆஸ்திரேலியா (India Vs Australia Cricket Match):

போட்டி அணிகள்: இந்தியா Vs ஆஸ்திரேலியா (IND Vs AUS)

போட்டி நாள்: இரண்டாவது டி20ஐ போட்டி அக்டோபர் 31, 2025

போட்டி நேரம்: நண்பகல் 01:45 இந்திய நேரப்படி

போட்டி இடம்: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

போட்டி நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, சோனி ஸ்போர்ட்ஸ் (Star Sports) டிவி

இந்தியா Vs ஆஸ்திரேலிய அணி விபரம் (India Vs Australia Squad):

இந்திய அணி வீரர்கள் (India Team):

அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (C), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் (Australia Team):

மிட்செல் மார்ஷ் (C), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ ஷார்ட், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னெமன்

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).