IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா மூன்றாவது டி20ஐ.. இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!
India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் மூன்றாவது டி20ஐ (IND Vs AUS 2nd T20I) போட்டி இன்று (நவ.02) ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
நவம்பர் 02, டாஸ்மேனியா (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டன. அதன்படி இதுவரை மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20ஐ போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. 20 ஓவர் ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. INDW Vs SAW Final: இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
இந்தியா எதிர் ஆஸ்திரேலியா டி20ஐ (India Vs Australia 3rd T20I Toss):
அதன்படி 5 போட்டிகளில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் மூன்றாவது ஆட்டம் நடைபெறுகிறது. முதல் ஆட்டம் மழையினால் தடைபட்ட நிலையில், இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுமா? (India Vs Australia) என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூன்றாவது கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியின் நேரலையை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி (Jio Hotstar) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Sony Sports) தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஒரு நாள் போட்டி கோப்பையை தவறவிட்ட இந்தியா டி20ல் ஆதிக்கம் செலுத்துமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா Vs ஆஸ்திரேலியா (India Vs Australia Cricket Match):
போட்டி அணிகள்: இந்தியா Vs ஆஸ்திரேலியா (IND Vs AUS)
போட்டி நாள்: மூன்றாவது டி20ஐ போட்டி நவம்பர் 02, 2025
போட்டி நேரம்: நண்பகல் 01:45 இந்திய நேரப்படி
போட்டி இடம்: பெல்லரிவ் ஓவல் கிரிக்கெட் மைதானம்
போட்டி நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, சோனி ஸ்போர்ட்ஸ் (Star Sports) டிவி
இந்தியா Vs ஆஸ்திரேலிய அணி விபரம் (India Vs Australia Squad):
இந்திய அணி வீரர்கள் (India Team):
சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (C), திலக் வர்மா, அக்சர் படேல், ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் (Australia Team):
மிட்செல் மார்ஷ் (C), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ ஷார்ட், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மேத்யூ குஹ்னேமன், சீன் அபோட்
(The above story first appeared on LatestLY on Nov 02, 2025 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

