INDW Vs SAW Final: இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!

ICC Women's World Cup Final 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி Vs தென் ஆப்பிரிக்கா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) மோதும் போட்டி நவ. 02, 2025ல் நடைபெறுகிறது. India Women Vs South Africa Women போட்டியை ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம்.

INDW Vs SAW Final: இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் போட்டி.. எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? விபரம் இதோ.!
Harmanpreet Kaur & Laura Wolvaardt | INDW Vs SAW ICC Women's Cricket Cup 2025 (Photo Credit : @ICC / @CricCrazyVeena X)

அக்டோபர் 31, நவிமும்பை (Sports News): இந்தியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup Finals 2025) இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை நடந்த 30 ஆட்டங்களில் இந்தியா தேசிய மகளிர் கிரிக்கெட் அணி - தென்னாப்பிரிக்கா தேசிய மகளிர் கிரிக்கெட் அணி (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. புள்ளிப்பட்டியல்படி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் முதல் இரண்டு இடத்தில் இருந்தாலும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா - இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று கவனம் பெற்றுள்ளன. அதே நேரத்தில், இதுவரை இந்த இரண்டு அணிகளும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெண்கள் பிரிவில் ஒரு கோப்பையை கூட கைப்பற்றாத நிலையில், தற்போது அதற்கான வாய்ப்பு இரண்டு அணிகளுக்கும் கிடைத்துள்ளது.

இந்தியா பெண்கள் Vs ஆஸ்திரேலியா பெண்கள் போட்டி (India Women Vs South Africa Women Cricket):

கடந்த அக்டோபர் 29ஆம் தேதி நடந்த செமி பைனல் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க தேசிய மகளிர் கிரிக்கெட் அணி - இங்கிலாந்து தேசிய மகளிர் கிரிக்கெட் அணி இடையே நடைபெற்ற ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி அடைந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று (அக்டோபர் 30) ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணி - இந்தியா பெண்கள் கிரிக்கெட் அணி இடையே நடைபெற்ற ஆட்டத்தில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி அடைந்தது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய ஜெமியா 134 பந்துகளில் 127 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தார். IND Vs AUS, 2nd T20I: இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20ஐ.. ஆஸ்திரேலியா அபார வெற்றி..! 

இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி Vs தென்னாப்பிரிக்கா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி மோதல் (India Women's National Cricket Team Vs South Africa Women's National Cricket Team):

அதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி - தென்னாபிரிக்கா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி (India Women Vs South Africa Women Final 2025) இடையே இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி ஐசிசி மகளிர் உலக கோப்பையை கைப்பற்றும் என்பதால் இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி அதீத எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்த போட்டி நவிமும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியின் நேரலையை ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் காணலாம். இரு அணிகளும் சமமான அளவு போட்டித் தன்மையுடன் விளையாடும் என்பதால் போட்டி மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் (ICC Women's Cricket World Cup 2025 India Vs South Africa):

போட்டி அணிகள்: இந்தியா W Vs தென்னாப்பிரிக்கா W (India Women's Vs South Africa Women's Cricket)

நடைபெறும் இடம்: டிஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானம், நவி மும்பை, மகாராஷ்டிரா

போட்டி முறை: 50 ஓவர்கள்

போட்டி தொடங்கும் நேரம்: நண்பகல் 03:00 மணி

நேரலை விபரம்: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar), ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports)

(The above story first appeared on LatestLY on Oct 31, 2025 06:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).