IND Vs AUS 5th T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட்.. டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா.. கருணை காட்டிய வருண பகவான்.!
India Vs Australia Cricket: இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team Vs Australia National Cricket Team) இடையே நடைபெறும் ஐந்தாவது டி20ஐ (IND Vs AUS 5th T20I) போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை (India Wins T20 Series) வென்றது.
நவம்பர் 08, குயின்ஸ்லாந்து (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டன. அதன்படி இதுவரை மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20ஐ போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. அதன்படி 5 போட்டிகளில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நவம்பர் 8 ஆம் தேதியான சனிக்கிழமை இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் ஐந்தாவது ஆட்டம் நடைபெறுகிறது. கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள தி கப்பா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இந்தியா எதிர் ஆஸ்திரேலியா டி20ஐ (India Vs Australia 5th T20I):
இந்த போட்டியின் நேரலையை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி (Jio Hotstar) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Sony Sports) தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஒரு நாள் போட்டி கோப்பையை தவறவிட்ட இந்தியா டி20ல் ஆதிக்கம் செலுத்துமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் முதல் ஆட்டம் மழையினால் தடைபட்ட நிலையில், இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து மூன்றாவது & நான்காவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனால் ஐந்தாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 கோப்பையை கைப்பற்றுமா? என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. IND Vs AUS: இந்தியா Vs ஆஸ்திரேலியா 5வது டி20ஐ.. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு.!
இந்தியா Vs ஆஸ்திரேலியா 5வது டி20 மழையால் ரத்து:
இந்த நிலையில் இந்திய அணியின் சார்பாக முதலில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 13 பந்துகளில் 23 ரன்களும், சுப்மன் கில் 16 பந்துகளில் 29 ரன்களும் எடுத்திருந்தனர். 4.5 ஓவர் முடிவில் 52 ரன்கள் உடன் இந்திய அணி விளையாடி கொண்டிருந்த நிலையில், இடி மின்னலுடன் மழை பெய்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நண்பகல் 2 மணி அளவில் மழையின் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட போட்டியை மீண்டும் தொடர பல முயற்சிகள் எடுத்த நிலையில், மழை நிற்காமல் பெய்து வந்ததால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது.
டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா:
🚨 The 5th T20I has been called off due to rain.#TeamIndia win the series 2-1 🏆
Scorecard ▶️ https://t.co/V6p4wdCkz1#AUSvIND pic.twitter.com/g6dW5wz1Ci
— BCCI (@BCCI) November 8, 2025
(The above story first appeared on LatestLY on Nov 08, 2025 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

