நவம்பர் 08, குயின்ஸ்லாந்து (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிடப்பட்டன. அதன்படி இதுவரை மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20ஐ போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. அதன்படி 5 போட்டிகளில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நவம்பர் 8 ஆம் தேதியான சனிக்கிழமை இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் ஐந்தாவது ஆட்டம் நடைபெறுகிறது. கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள தி கப்பா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இந்தியா எதிர் ஆஸ்திரேலியா டி20ஐ (India Vs Australia 5th T20I):
இந்த போட்டியின் நேரலையை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி (Jio Hotstar) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Sony Sports) தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம். ஒரு நாள் போட்டி கோப்பையை தவறவிட்ட இந்தியா டி20ல் ஆதிக்கம் செலுத்துமா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் முதல் ஆட்டம் மழையினால் தடைபட்ட நிலையில், இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து மூன்றாவது & நான்காவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனால் ஐந்தாவது ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 கோப்பையை கைப்பற்றுமா? என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. IND Vs AUS, 4th T20I: ஆஸ்திரேலியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்.. இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
இந்தியா Vs ஆஸ்திரேலியா (India Vs Australia Cricket Match):
போட்டி அணிகள்: இந்தியா Vs ஆஸ்திரேலியா (IND Vs AUS)
போட்டி நாள்: ஐந்தாவது டி20ஐ போட்டி நவம்பர் 08, 2025
போட்டி நேரம்: நண்பகல் 01:45 இந்திய நேரப்படி
போட்டி இடம்: தி கப்பா கிரிக்கெட் மைதானம்
போட்டி நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, சோனி ஸ்போர்ட்ஸ் (Star Sports) டிவி
இந்தியா Vs ஆஸ்திரேலிய அணி விபரம் (India Vs Australia Squad):
இந்திய அணி வீரர்கள் (India Team):
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (C), ரிங்கு சிங், அக்சர் படேல், சிவம் துபே, ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் (Australia Team):
மிட்செல் மார்ஷ் (C), மேத்யூ ஷார்ட், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட், ஜோஷ் பிலிப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ளென் மேக்ஸ்வெல், பென் டுவார்ஷுயிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், மற்றும் ஆடம் ஜாம்பா.