நவம்பர் 28, புதுடெல்லி (New Delhi): துருக்கியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்படுத்த கடுமையான நிலநடுக்கம், 50 ஆயிரம் உயிர்களை பறித்தது. இந்த நிலநடுக்கத்தை முன்பே கணித்திருந்த நிலவியல் ஆய்வாளர் Frank Hoogerbeet, அடுத்தபடியாக ஆப்கானிஸ்தான் - இந்தியா - பாகிஸ்தான் நாடுகளை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுத்தார்.
இந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், 2 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பறித்தது. இதனைத்தொடர்ந்து, இந்திய எல்லைப்பகுதிகளான இமயமலைத்தொடரில் அமைந்த நேபாளமும் நிலநடுக்கத்தின் பிடியில் சிக்கி 153க்கும் மேற்பட்டோரின் உயிரை இழந்தது.
அயர்லாந்து நாட்டில் உள்ள எரிமலைகள் தொடர்ந்து நிலத்திற்கடியில் சீறி வருவதால், அங்கு ஒருநாளில் குறைந்தது 600க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. Saffron Benefits Tamil: உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரிவழங்கும் குங்குமப்பூ: சரும பராமரிப்பு முதல் உடல்நலம் வரை.. விபரம் இதோ.!
இந்நிலையில், இன்று அதிகாலை 03:16 மணியளவில், ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ கினியா (New Guinea Earthquake) தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதேபோல, 03:44 மணியளவில் சீனாவில் உள்ள திபெத், சிஜாங் (Xizang Earthquake) நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
பாகிஸ்தானில் 03:38 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் (Pakistan Earthquake) ரிக்டர் அளவுகோலில் 4.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து சர்வதேச அளவில் நியூ கினியா, பாகிஸ்தான், சீனா நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை எனினும், மக்கள் அச்சத்திற்கு உள்ளாகினர்.