நவம்பர் 16, புதுடெல்லி (Sports News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியுடன் (Team South Africa), இந்திய கிரிக்கெட் அணி (Team India Cricket) டெஸ்ட், ஒருநாள், டி20ஐ போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - தென் ஆப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணி (South Africa National Cricket Team Vs India National Cricket Team) இடையே நடைபெறும் போட்டிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. IND Vs SA Cricket 2025 போட்டியில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வெற்றியை ஏந்திப்பிடிக்க முயற்சிக்கும். அதே நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வெற்றியை உறுதி செய்ய போராடும் என்பதால், ஒவ்வொரு ஆட்டமும் அதிரடியாக சூடுபிடிக்கும். India Vs South Africa: இந்தியா Vs தென்னாபிரிக்கா கிரிக்கெட் ஹைலைட்ஸ்.. 2வது இன்னிங்ஸ் நிலவரம் என்ன?
இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி(India vs South Africa 1st Test):
இந்த தொடரின் முதல் ஆட்டமாக டெஸ்ட் போட்டி நவம்பர் 14 முதல் தொடங்கி நடைபெற்றது. முதல் டெஸ்ட் தொடர், கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாளில் உற்சாகத்துடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 55 ஓவரில் 159 ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் களம் இறங்கி 62.2 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் விட்டதை பிடிக்க இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி முயற்சி செய்த நிலையில், 2வது நாள் முடிவில் 35 ஓவரில் 93 ரன்கள் எடுத்து இருந்தது. 2வது நாளின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தல் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி:
தொடர்ந்து இன்று மூன்றாவது நாளில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 54 ஓவரில் 153 ரன்கள் எடுத்து மொத்த விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பவுமா மட்டும் 55 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் இந்திய அணிக்கு 124 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கிய இந்திய அணி 35 ஓவரில் 93 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. முதலில் நன்றாக விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வி அடைந்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
சிக்ஸர் அடித்த அக்சர் படேல்:
Axar-ன் Bat-ல் இருந்து பறந்தது Sixer! 🚀
📺 தொடர்ந்து காணுங்கள் | India vs South Africa | 1st Test, Day 03 | JioHotstar & Star Sports 2 தமிழில்#StarSportsTamil #TeamIndia pic.twitter.com/6I7rwV4Vbi
— Star Sports Tamil (@StarSportsTamil) November 16, 2025