IND Vs WI 2023 T20I: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 இரண்டாவது ஆட்டத்தில் அதிரடி மாற்றம்; களமிறக்கப்படும் முக்கிய வீரர்.. விபரம் உள்ளே.!
5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் முதல் ஆட்டம் விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்ற நிலையில், 20 ஓவர் முடிவில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
ஆகஸ்ட் 04, மேற்கிந்திய தீவுகள் (Cricket News): மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரை முடித்துவிட்டு 20 ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது.
5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் முதல் ஆட்டம் விறுவிறுப்புடன் தொடங்கி நடைபெற்ற நிலையில், 20 ஓவர் முடிவில் முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
அதனைத்தொடர்ந்து, மறுமுனையில் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் பல வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறியதால் முதல் T20I ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தது. X Live Video: X (ட்விட்டர்) நேரலை வீடியோ சோதனை வெற்றி; எலான் மஸ்க் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆகஸ்ட் 06ம் தேதி T20I போட்டியின் இரண்டாவது ஆட்டம் கயானாவில் இருக்கும் பிரவிடான்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் சிறிது மாற்றம் செய்
து திலக்கை நிர்வாகம் களமிறக்கலாம் என எதிர்பார்க்கபடுகிறது. எதிர்வரும் இரண்டாவது T20 போட்டியில் இந்திய அணியின் சார்பில் இஷான் கிஷன் (WK), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (C), சஞ்சு சாம்சன், அக்சர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார் ஆகியோர் விளையாடலாம் என்று கூறப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Aug 04, 2023 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

