ஆகஸ்ட் 04, அமெரிக்கா (Technology News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ட்விட்டர். இந்நிறுவனத்தை சமீபத்தில் உலக செல்வந்தர்களும் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் வாங்கினார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு நிர்வாக மற்றும் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ட்விட்டரை சமீபத்தில் தனது Space X அங்கமாக கொண்டு வரும்பொருட்டு X என பெயர் மாற்றம் செய்து, அதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டுள்ளன. Nikita Dutta Vacation: மாலத்தீவில் மல்கோவா போல இளைஞர்களின் மனதை பிகினியால் வருடும் நிகிதா; கிக்கேற்றும் போட்டோவால் துடிக்கும் ரசிகர்கள்.!
பணம் செலுத்தி தனியுரிமை பெற்ற சந்தாதாரர்களுக்கு சிறப்பு சலுகைகளும், சாதாரண பயனர்களுக்கு எவ்வித சலுகை இன்றியும் ட்விட்டரை உபோயோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ட்விட்டரில் லைவ் வீடியோ பதிவிடுவது சோதனை செய்யப்பட்டது.
இது தொடர்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதனை சோதித்து முயற்சியில் வெற்றி அடைந்துள்ளதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கான விடீயோவையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுகள் வரவேற்பை பெற்றுள்ளன.
நேரலை விடியோவை எலான் மஸ்க் சோதித்த காட்சிகள்:
— Elon Musk (@elonmusk) August 4, 2023
நேரலை நன்கு வேலை செய்கிறது - எக்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்த பதிவு:
Live video now works reasonably well. Just tap the button that looks like a camera when you post: pic.twitter.com/ILQEQFmY5R
— Elon Musk (@elonmusk) August 4, 2023