IND Vs WI: மழையால் தாமதமான IND Vs WI ஆட்டம்; ஒரு புள்ளியாவது வெஸ்ட் இண்டீஸ் பெறுமா? என எதிர்பார்ப்பு.!
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால் உட்பட இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர்.
ஜூலை 24, குயின் பார்க் ஓவல் (Cricket News): மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இன்று 5வது நாளை எதிர்கொள்கிறது. போட்டியின் நடுவே அங்கு மழை குறுக்கிட்டதால், ஆட்டம் சிறிது தடைபட்டுள்ளது.
20 நிமிடம் பெய்த மழை நின்றதை தொடர்ந்து, நடுவர்கள் மைதானத்தை சோதனையிட சென்றுள்ளனர். 2 போட்டியில் இந்தியா 1 - 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து ஏமாற்றத்தை சந்தித்து வருகிறது.
தனது சொந்த மண்ணில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா தீரத்துடன் எதிர்கொண்டு வருகிறது. 365 ரன்கள் எடுத்தால் 1 புள்ளி பெறலாம் என்ற கட்டாயத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணி இன்று விளையாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. Nigeria Fuel Tanker Blast: டேங்கர் லாரி வெடித்து பயங்கர விபத்து; கர்ப்பிணி பெண், 3 குழந்தைகள் உட்பட 20 பேர் பரிதாப பலி.!
இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த ஆட்டத்திற்கு பின் 27 மற்றும் 29ம் தேதிகளில் ஒருநாள் போட்டியும் நடைபெறவுள்ளது.
இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே, கே.எஸ்.பாரத், இஷான் கிஷான், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஷர்துல் தாகூர் ஆகியோர் விளையாடுகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Jul 24, 2023 09:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

