ஜூலை 24, நைஜீரியா (World News): ஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில், டேங்கர் லாரி வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிக்கு அருகே நடந்த கொடூர விபத்தில், 20 பேர் பலியாகியிருக்கலாம் என உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் 3 குழந்தைகள், கர்ப்பிணி பெண்மணி உட்பட 20 பேர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நைஜீரியாவில் இருக்கும் லாகோஸ் - பெனின் அதிவிரைவு நெடுஞ்சாலையில் விபத்து நடந்துள்ளது. PSLV-C56: ஜூலை 30 மாலை 06:30 மணியளவில் 7 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
லாரியின் மீது வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும், இதனால் அப்பகுதியை கரும்புகை சூழ்ந்து பரபரப்புடன் காட்சி அளித்தது என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.