Team India Celebration Video: உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய பெண்கள் அணி.. 52 வருடக் காத்திருப்புக்கு முடிவு.. வெற்றிக் கொண்டாட்ட வீடியோ.!
ICC Women's World Cup Victory 2025 INDW Vs SAW: ஐசிசி மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தேசிய பெண்கள் கிரிக்கெட் அணி வெற்றி அடைந்தது. 52 ஆண்டுகளுக்கு பின் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளதால் இந்தியாவே பெருமிதம் அடைந்துள்ளது.
நவம்பர் 03, நவி மும்பை (Sports News): இந்தியாவில் விறுவிறுப்புடன் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2025 (ICC Women's Cricket World Cup Finals 2025) நேற்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் வெல்லும் அணி ஐசிசி மகளிர் உலக கோப்பையை கைப்பற்றும் என்பதால் இந்தியா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணி - தென் ஆப்பிரிக்கா பெண்கள் தேசிய கிரிக்கெட் அணிக்கு (Indian National Cricket Team Vs South Africa National Cricket Team) இடையே நடைபெற்ற போட்டி அதீத எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. போட்டி மழையின் காரணமாக சற்று தாமதமானாலும், விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி (INDW Vs SAW Final Highlights 2025 ) பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 58 பந்துகளில் 45 ரன்கள், ஷபாலி வர்மா 78 பந்துகளில் 87 ரன்கள், ஜெமியா ரோட்ரிங்ஸ் 37 பந்துகளில் 24 ரன்கள், ஹர்மன்ப்ரீத் கவுர் 29 பந்துகளில் 20 ரன்கள், தீப்தி சர்மா 58 பந்துகளில் 58 ரன்கள், அமஞ்சோத் கவுர் 14 பந்துகளில் 12 ரன்கள், ரிச்சா கோஷ் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தனர். 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழந்த இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 298 ரன்கள் எடுத்தனர்.
இந்திய தேசிய கிரிக்கெட் அணி வெற்றி கொண்டாட்டம் (Indian National Cricket Team Celebration):
299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 45.3 ஓவரில் 10 விக்கெட்டையும் இழந்து தோல்வியடைந்தது. இதனால் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றிருந்தது. இந்திய தேசிய கிரிக்கெட் அணி தனது முதல் உலக கோப்பையை கைப்பற்றியது இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. உலக கோப்பையை வென்ற இந்திய அணியின் கொண்டாட்டம் (Team India Victory Celebration Video) தொடர்பான வீடியோக்கள் இந்த செய்தித்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷெபாலி சர்மா மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறார். இந்த வெற்றியை சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா உட்பட பலரும் மனம்நெகிழ்ந்து கொண்டாடினர். IND Vs AUS 3rd T20I: இந்தியா அசத்தல் வெற்றி.. இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டியில் திரில் ஆட்டம்.!
உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி (Team India Victory ICC Women's World Cup):
ஆனந்த கண்ணீரில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி (INDW Vs SAW Final 2025 Celebration):
முதல் உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி (India Women Vs South Africa Women Final 2025):