அக்டோபர் 02, டாஸ்மேனியா (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா தேசிய கிரிக்கெட் அணி - ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் (India National Cricket Team Vs Australia National Cricket Team) இன்று மூன்றாவது டி20ஐ போட்டியில் விளையாடி இருந்தன. இந்த ஆட்டம் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் சார்பில் விளையாடிய டார்விஸ் ஹெட் 4 பந்துகளில் 6 ரன்கள் மட்டும் அடித்து அவுட்டாகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ் 14 பந்துகளில் 11 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். ஜோஷ் இங்கிலிஸ் 7 பந்துகளில் 1 ரன் அடித்து அவுட்டாகி வெளியேறினார். இதனால் அடுத்தடுத்து மூன்று விக்கெட் பறிபோன நிலையில், டிம் டேவிட் களத்தில் நின்று ஆடி 38 பந்துகளில் 74 ரன்கள் சேகரித்து இருந்தார். மிட்செல் ஓவன் 1 பந்தில் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து களத்தில் இருந்த மார்கஸ் மற்றும் மேத்யூ ஷார்ட் நின்று ஆடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மார்கஸ் 39 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தார். மேத்யூ ஷார்ட் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல சேவியர் 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஆட்டத்தின் முடிவில் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 186 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்டையும், வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தனர். INDW Vs SAW Final: இந்தியா பெண்கள் Vs தென்னாப்பிரிக்கா பெண்கள் இறுதிப்போட்டி.. தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு.!
இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட் (India Vs Australia Cricket Live Today):
இந்நிலையில், இந்திய அணியின் சார்பில் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தாலும், நின்று ஆடியதால் அணியின் வெற்றி வசமாகியுள்ளது. இதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி20 போட்டியில், 5 போட்டிகள் கொண்ட தொடரில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் சார்பில் விளையாடிய அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் 25 ரன்கள், சுப்மன் கில் 12 பந்துகளில் 15 ரன்கள், சூரியகுமார் யாதவ் 11 பந்துகளில் 24 ரன்கள், திலக் வர்மா 26 பந்துகளில் 29 ரன்கள், அக்சர் படேல் 12 பந்துகளில் 17 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 49 ரன்கள், சித்தேஷ் சர்மா 13 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அசத்தியிருந்தனர். இதனால் 18.3 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 188 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி அடைந்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பந்து வீசிய நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இந்திய அணியின் வெற்றி ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
சூரியகுமார் யாதவ் அசத்தல் பேட்டிங் (Suryakumar Yadav IND Vs AUS 3rd T20I 2025):
That signature Surya whip! 🚀
Picks it up effortlessly and sends it sailing - pure Skyball energy from the captain! 🇮🇳🔥#AUSvIND 👉 3rd T20I | LIVE NOW 👉 https://t.co/JJaBX22Idf pic.twitter.com/dMmo1BnI8L
— Star Sports (@StarSportsIndia) November 2, 2025