IND Vs BAN Test: 3-ஆம் நாள் உணவு இடைவேளை; இந்தியா 432 ரன்கள் முன்னிலை.. கில் - பண்ட் அதிரடி ஆட்டம்..!

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட் போட்டியின், 3-ஆம் நாளில் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 432 ரன்கள் முன்னிலையில் விளையாடிக்கொண்டிருக்கிறது.

IND Vs BAN Test: 3-ஆம் நாள் உணவு இடைவேளை; இந்தியா 432 ரன்கள் முன்னிலை.. கில் - பண்ட் அதிரடி ஆட்டம்..!
IND Vs BAN 1st Test Day 3 (Photo Credit: @GuessWh98609542 X)

செப்டம்பர் 21, சென்னை (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில், முதல் டெஸ்ட் போட்டி (IND Vs BAN 1st Test, Day 3) செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி, இன்று 3-ஆம் நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 308 ரன்கள் முன்னிலை வகித்தது. இந்நிலையில், இன்று 3-ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. IND Vs BAN Test: இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு.. 149 ரன்களில் சுருண்ட வங்கதேசம்.., இந்தியா 308 ரன்கள் முன்னிலை..!

இதில், சுப்மன் கில் (Shubman Gill) மற்றும் ரிஷப் பண்ட் (Rishabh Pant) ஜோடி ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி இருவரும் அரைசதம் கடந்தனர். பின், இருவரும் அவ்வப்போது அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட்டனர். மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 51 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் குவித்துள்ளது. கில் 86 ரன்களுடனும், பண்ட் 82 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தற்போது வரை 432 ரன்களுடன் முன்னிலையில் இருக்கிறது.

(The above story first appeared on LatestLY on Sep 21, 2024 11:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).