IND Vs BAN 1st Test, Day 2 (Photo Credit: @ETVBharatUrdu X)

செப்டம்பர் 20, சென்னை (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில், முதலாவது டெஸ்ட் போட்டி (IND Vs BAN 1st Test, Day 2) நேற்று (செப்டம்பர் 19) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 80 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் குவித்துள்ளது. IND Vs BAN Test: முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்களுக்கு ஆல் அவுட்.. வங்கதேச அணி தடுமாற்றம்..!

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் இந்திய அணி மீதமுள்ள 4 விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் அடித்தது. இதன்பின்னர், களமிறங்கிய வங்கதேச அணி ஆரம்பத்திலேயே இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக சாஹிப் அல் ஹசன் (Shakib Al Hasan) 32 ரன்கள் அடித்தார். மீதமுள்ள பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர்.

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் பும்ரா (Jasprit Bumrah) 4 விக்கெட்களும் சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதனையடுத்து, இந்தியா தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் தொடக்க வரிசை ஆட்டகாரர்கள் ஜெய்ஸ்வால், கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டானர். இதனால் இந்திய அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 23 ஓவர்களில் 81-3 என்ற கணக்கில், 308 ரன்கள் முன்னிலை வகிக்கின்றது. சுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.