அக்டோபர் 25, புனே (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், நேற்று (அக்டோபர் 24) இந்தியா - நியூசிலாந்து (IND Vs NZ 2nd Test, Day 2) அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி புனேயில் (Pune) தொடங்கியது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (Rohit Sharma) டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் அடித்திருந்தது. Virat Kohli: விக்கெட்டை இழந்து கண்கள் கலங்கி வெளியேறிய விராட் கோலி; தடுமாறும் இந்திய அணி..!
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில், ஆரம்பத்தில் இருந்தே நிதானமாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் - கில் ஜோடி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த விராட் கோலி (Virat Kohli) 1 ரன்னில் சான்ட்னர் பந்தில் போல்டானார். இதனையடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் ரிஷப் பண்ட் 18, சர்பராஸ் கான் 11, அஸ்வின், 4 அடுத்தடுத்து பெவிலியன் நோக்கி திரும்பினர்.
இந்திய அணி நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மதிய உணவு இடைவேளை வரை 38 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. நியூசிலாந்து அணி சார்பில் சான்ட்னர் (Mitchell Santner) 4, பிலிப்ஸ் 2, சவுதி 1 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இந்திய அணியில் ஜடேஜா (Ravindra Jadeja) 11 ரன்னிலும், சுந்தர் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.