அக்டோபர் 25, புனே (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து (NZ India Tour) அணி, பெங்களூரில் இந்திய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் (IND Vs NZ Test Series 2024) தொடரை எதிர்கொண்டு 36 ஆண்டுகளுக்கு பின்னர் பெங்களூர் மைதானத்தில் தனது வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து, இரண்டாவது டெஸ்ட் தொடர் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புனே கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது.
முன்னேறும் நியூசிலாந்து, பின்னடைவில் இந்தியா:
ஆட்டத்தின் முதல் நாளில் நியூசிலாந்த அணி பேட்டிங் செய்த நிலையில், 79.1 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்து 259 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் டெக்கான் கான்வே 141 பந்துகளில் 76 ரன்னும், ரச்சின் ரவிந்திரா 15 பந்துகளில் 65 ரன்னும், டாய்ரல் மிட்செல் 51 பந்துகளில் 33 ரன்னும் அதிகபட்சமாக அடித்து இருந்தனர். பின் இந்திய அணி களமிறங்கி விளையாடி வரும் நிலையில், 35 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 99 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியன் சார்பில் விளையாடியவர்களில் ஜெய்ஸ்வால் 60 பந்துகளில் 30 ரன்னும், ஷுப்மன் கில் 72 பந்துகளில் 30 ரன்னும் அதிகபட்சமாக தற்போது வரை அடித்துள்ளனர். CM Trophy 2024: 2024 முதலமைச்சர் கோப்பையை தட்டிச்சென்றது சென்னை.. உங்கள் மாவட்டத்தில் வெற்றி நிலவரம் என்ன?.. முழு விபரம் உள்ளே.!
இந்திய அணியின் மீது அழுத்தம் அதிகரிப்பு:
மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா (Rohit Sharma) 9 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல், டிம் சவுத்தியின் பந்துவீச்சில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலியும் (Virat Kohli) ஒன்பது பந்துகளில் ஒரு ரன் மட்டும் அடித்து மிட்செல் சான்டரின் பந்துகளில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து இரண்டு முக்கிய புள்ளிகள் விக்கெட்டை இருந்து வெளியேறியது அணியினருக்கு பெருமை அதிர்ச்சியை தந்தது. மூன்றாவது ஓவரில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்த நியூசிலாந்தின் அணி, பின் 21 ஓவர் 23 வது ஓவர் என அடுத்தடுத்து இந்திய அணியின் மீது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
விராட் கோலி சோகம்:
இதனால் இரண்டாவது டெஸ்ட் தொடரும் இந்திய அணியின் கைகளில் இருந்து நழுவி செல்லுமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதனிடையே விராட் கோலி தனது விக்கெட்டை இழந்ததும், மனமுடைந்து தனது முகபாவணையை வெளிப்படுத்திய காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உணவு இடைவெளி வரை 38 ஓவர்கள் போடப்பட்டு, இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. எஞ்சிய வாஷிங்க்டன் சுந்தர், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் களமிறங்க காத்திருக்கின்றனர்.
முந்தைய டெஸ்ட் தொடரை ஒப்பிடுகையில், இந்திய அணி பந்துவீச்சில் தனது ஆதிக்கத்தை செலுத்துவது போல தோன்றினாலும், நியூசிலாந்து அணியினர் அதனை திறம்பட எதிர்கொண்டு சமாளித்து அணியின் வெற்றிக்கு / ரன்கள் குவிப்புக்கு வழிவகை செய்கின்றனர்.
விராட் கோலி விக்கெட் இழந்த காட்சி:
Virat Kohli out 🥺🥺🥺#ViratKohli #INDvsNZ pic.twitter.com/49ytD5Jewv
— Virat (@chiku_187) October 25, 2024
விராட் கோலியின் விக்கெட் இந்திய அணிக்கு இழப்பு என வருத்தப்படும் ரசிகர்:
THE Great Virat Kohli can't even play a full toss 😭😭 pic.twitter.com/XNomySBHqt
— ADITYA (@140OldTrafford) October 25, 2024
எதிரணி திட்டமிட்டு கவனசிதறலை உண்டாக்கி விக்கெட் இழப்புக்கு வழிவகை செய்ததாக ரசிகர்கள் புகார்:
When Mitchell Santner bowls the ball then Tom Latham’s handkerchief is falls on the ground during that time
So Virat Kohli got distracted by this so he is basically not out as per rules.#ViratKohli #INDvsNZ #Cricket #Bcci pic.twitter.com/4t35Y7fRLv
— Virat Kohli (@viratkohliniece) October 25, 2024