India vs Australia T20I: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் டி20 போட்டிகள் இன்று தொடக்கம்: முழு விபரம் இதோ.!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று தனது முதல் டி20 ஆட்டத்தில் மோதுகிறது. இந்திய அணியை சூரியகுமார் யாதவ் வழிநடத்துகிறார்.

India vs Australia T20I: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் டி20 போட்டிகள் இன்று தொடக்கம்: முழு விபரம் இதோ.!
Surya Kumar Yadav | Matthew Wade / IND Vs AUS T20I / 23 Nov 2023(Photo Credit: X)

நவம்பர் 23, விசாகப்பட்டினம் (Sports News): இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த 13வது ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி கோப்பையை பெற்றது. 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் தொடரில், அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய அணி சாம்பியனாக இருக்கும்.

இதனையடுத்து, தற்போது டி20 போட்டிகளுக்கான செயல்கள் தொடங்கிவிட்ட நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இன்று தனது முதல் டி20 ஆட்டத்தில் மோதுகிறது. இந்திய அணியை சூரியகுமார் யாதவ் வழிநடத்துகிறார். ஆஸ்திரேலிய அணியை மெத்திவ் வழிநடத்துகிறார்.

இந்திய அணியில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். Laser-Beamed Message From Space: 16 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்து வந்த முதல் லேசர் சமிக்கை: வேற்றுகிரகவாசிகள் தொடர்பா?..! 

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் ஷாங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இன்று இரவு 07:00 மணியளவில் விசாகப்பட்டினம் நகரில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து ஆட்டம் நடைபெறுகிறது. இதனை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட 11 மொழிகளில் கண்டுகளிக்கலாம். இணையவழியில் ஜியோ சினிமா செயலில் இலவசமாக பார்க்கலாம்.

உலகக்கோப்பை போட்டியில் முதல் தோல்வியை சந்தித்து கோப்பையை கைவிட்ட இந்தியா, எதிர்வரும் 5 டி20 போட்டியில் எப்படி விளையாடப்போகிறது? என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காணுவதற்கு காத்திருக்கின்றனர்.

(The above story first appeared on LatestLY on Nov 23, 2023 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).