Laser Beam Signal (Photo Credit: @Dailymail X)

நவம்பர் 23, வாஷிங்க்டன் (Technology News): நாம் வாழும் உலகில் வானியல் (Space Research) தொடர்பான ஆராய்ச்சிகளை பல்வேறு நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. பால்வழி அண்டத்தில் (Milky Way) நாம் மட்டும் தனித்து விடப்படவில்லை, நம்மைப்போல பல அண்டங்கள், விண்மீன் திரள்கள், நட்சத்திர கூட்டங்கள், கருந்துளைகள் (Black Whole) விண்வெளியில் நிறைந்திருக்கின்றன என்பது சமீபத்திய ஆராய்ச்சியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, வேற்றுகிரகங்களில் (Planet) நம்மைப்போல பூமி இருக்கும் பட்சத்தில், அங்கு மனிதர்களைப்போல உயிர்கள் வாழுகின்றனவா? என்ற ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான ஆராய்ச்சிகள் சமீபகாலமாகவே முன்னேற்றங்களை கண்டு வருகிறது. ஏலியன்கள் (Alien) என்ற வேற்றுகிரகவாசிகள் தொடர்பான பல கூற்று உலாவினாலும், வானியல் ரீதியான ஆய்வுகள் தொடருகின்றன.

Earth (Photo Credit: Pexels)

இந்நிலையில், நாசா பூமிக்கு வெளிப்பக்கத்தில் 16 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து முதல் லேசர் ஒளிக்கற்றை (Laser-Beam Communication) வடிவிலான குறுஞ்செய்தியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது போன்ற லேசர் சமிக்கைகளை பெறுவது இதுவே முதல் முறை என்பதால், அங்கிருந்து சிக்னல் அனுப்பியது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. US Shocker: 14 வயது சிறுவர்களை தனது வலையில் வீழ்த்தி, உல்லாசம் அனுபவித்த ஆசிரியை: அமெரிக்காவில் பகீர் சம்பவம்.! 

புவியில் இருந்து நிலவுக்கு செல்லும் தூரத்தில், அதைவிட 4 மடங்கு தூரம் கொண்ட எண்ணிக்கை கடந்து உள்ள விண்வெளிப்பகுதியில் (Deep Space Optical Communications DSOC) இருந்து சமிக்கை பெறப்பட்டுள்ளது. லேசர் வழியில் கிடைக்கும் தகவலை கண்டறிந்து அனுப்ப, கடந்த அக்.13 அன்று நாசா புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து Psyche Mission ராக்கெட்டை ஏவியிருந்த நிலையில், தற்போது முதல் முறையாக சமிக்கை பெறப்பட்டுள்ளது.

16 மில்லியன் தூரத்தினை கடக்க 50 வினாடிகளே எடுத்துக்கொண்டதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இதனால் விரைவில் வேற்றுகிரகத்தில் இருப்போர், நமது பூமியின் சமிக்கைகளை பெற்று பதில் வழங்குவார்கள் என தெரியவருகிறது. பூமியின் தகவல் பரிமாற்றம் அலைக்கற்றைகளை, வேற்றுகிரகவாசிகள் விரைவில் உள்வாங்கி பதில் அளிக்கலாம் எனவும் ஆய்வளார்கள் நம்பிக்கை கூறுகின்றனர்.